சரக்கு ஆட்டோ-மோட்டார் சைக்கிள் நேருக்குநேர் மோதல்; வாலிபர் சாவு
சரக்கு ஆட்டோ-மோட்டார் சைக்கிள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் வாலிபர் உயிரிழந்தார்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காமரசவல்லி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் விடுதலைமணி(வயது 24). இவர் தனது மோட்டார் சைக்கிளில், அதே கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியனின் மகன் பழனிவேல்ராஜனுடன்(27) நேற்று காலை காமரசவல்லி கிராமத்தில் இருந்து ஏலாக்குறிச்சி நோக்கி சென்றார். கா.மாத்தூர் அருகே சென்றபோது எதிரே வந்த சரக்கு ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் விடுதலைமணி மற்றும் பழனிவேல்ராஜனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை விடுதலைமணி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தூத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story