நியமன, வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்வு


நியமன, வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்வு
x
தினத்தந்தி 3 April 2022 1:48 AM IST (Updated: 3 April 2022 1:48 AM IST)
t-max-icont-min-icon

நியமன, வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆண்டிமடம்:
ஆண்டிமடம் அருகே உள்ள வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் நியமன குழு மற்றும் வரி விதிப்பு மேல் முறையீட்டு குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் பேரூராட்சி அலுவலக கூட்ட மன்றத்தில் நடைபெற்றது. செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி வரவேற்றார். பேரூராட்சி தலைவர் மார்கிரெட் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் எட்வின் ஆர்த்தர் முன்னிலை வகித்தார். இதில் நியமனக்குழு உறுப்பினராக 15-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஜான் விக்டர் தேர்வு செய்யப்பட்டார். வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களாக 13-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஆலோசனை மேரி, 10-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கனிமொழி, 6-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஹெலன்மேரி, 5-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஜோசப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Next Story