வாகனம் மோதி 2 மயில்கள் சாவு
தினத்தந்தி 3 April 2022 1:48 AM IST (Updated: 3 April 2022 1:48 AM IST)
Text Sizeவாகனம் மோதி 2 மயில்கள் செத்தன.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த மணகெதி கிராமத்தில் நேற்று காலை திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒன்றரை வயது உடைய ஒரு ஆண், ஒரு பெண் என 2 மயில்கள் செத்துக்கிடந்தன. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து வனத்துறை காப்பாளர் தேவியிடம் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு அவரும், உடையார்பாளையம் கால்நடை மருத்துவரும் வந்தனர். அங்கு 2 மயில்களையும் உடற்கூறு ஆய்வு செய்து மணகெதி வனப்பகுதியில் புதைத்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire