இரு தரப்பினரிடையே மோதல்; 4 பேர் காயம்


இரு தரப்பினரிடையே மோதல்; 4 பேர் காயம்
x
தினத்தந்தி 3 April 2022 1:54 AM IST (Updated: 3 April 2022 1:54 AM IST)
t-max-icont-min-icon

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயமடைந்தனர்.

பெரம்பலூர்:
பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலை டாஸ்மாக் குடோன் அருகே உள்ள தர்ஷினி நகரில் வசிப்பவர் சுதர்சன் என்ற சூனி கண்ணன்(வயது 42). இவருக்கும், பெரம்பலூர் திருநகரை சேர்ந்த செந்தில் மகன் கவுதமுக்கும்(21) இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை சூனி கண்ணன் தரப்பினருக்கும், கவுதம் தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதில் கவுதமின் நண்பர் ஒருவரை சூனி கண்ணன் தரப்பினர் ஆயுதத்தை கொண்டு வெட்டியதாக கூறப்படுகிறது. மேலும் கவுதம் தரப்பினர், சூனி கண்ணன் தரப்பை சேர்ந்த 2 பேரை தாக்கியதில், அவர்களுக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பலத்த வெட்டு காயமடைந்த கவுதமின் நண்பரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சூனி கண்ணன் தரப்பினரும், கவுதமும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தபோது, அவர்களுக்கிடையே மீண்டும் கை கலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் கவுதம் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு சென்று இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story