மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.
பெரம்பலூர்:
‘லிப்ட்’ கேட்டு சென்றார்
பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் பழைய காலனியை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவரது மனைவி சுந்தரி(வயது 35). இவர் கடந்த 31-ந்தேதி மாலை சத்திரமனையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு, நேற்று முன்தினம் காலை சொந்த ஊர் திரும்புவதற்காக பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது அந்த வழியாக பெரம்பலூர் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி, அதில் வந்தவரிடம் ‘லிப்ட்’ கேட்டுள்ளார். இதையடுத்து அந்த நபர், சுந்தரியை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். வேலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த சுந்தரி படுகாயமடைந்தார்.
சாவு
இதனை கண்ட அவ்வழியாக சென்றவர்கள் சுந்தரியை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுந்தரி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக ரமேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story