வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கிய 3 பேர் கைது


வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 3 April 2022 1:56 AM IST (Updated: 3 April 2022 1:56 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

புளியங்குடி:

புளியங்குடி டி.என்.புதுக்குடி பிச்சாண்டி தெருவில் உள்ள ஒரு வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக புளியங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அந்த வீட்டிற்கு சென்று சோதனை நடத்தியபோது, அங்கு 8 மூட்டைகளில் மொத்தம் 65 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் ஆகும். மேலும் அந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.9 லட்சத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக புளியங்குடி டி.என்.புதுக்குடி பிச்சாண்டி தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் பிரசாந்த் (வயது 26), ஜின்னா நகரை சேர்ந்த சிக்கந்தர் மகன் செய்யது அலி (48), தென்காசி பெரிய தெருவைச் சேர்ந்த அஹமது ஷா மகன் நாகூர் மீரான் (29) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story