ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 3 April 2022 2:06 AM IST (Updated: 3 April 2022 2:06 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தென்காசி:

தென்காசி பாறையடி 2-வது தெருவைச் சேர்ந்தவர் சாகுல் என்ற லெப்ட் சாகுல் (வயது 32). ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்த நிலையில் தென்காசி போலீசார் இவரை தீவிரமாக தேடி வந்தனர். இவர் தென்காசியிலிருந்து ஆய்க்குடி செல்லும் சாலையில் உள்ள பச்சை நாயக்கன் பொத்தை பகுதியில் குளத்துக்குள் பதுங்கி இருந்தார். அந்த நேரத்தில் அங்கு குளத்தில் குளிக்க வந்த பெண்கள் மற்றும் பொதுமக்களை தன்னிடம் நெருங்காத அளவில் மிரட்டி வந்தாராம்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் தென்காசி போலீசார் அவரை டிரோன் கேமரா மூலம் கண்டுபிடித்து கைது செய்தனர். அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்ததால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்று சாகுலை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் கோபால சுந்தரராஜ் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு கடிதத்தை தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் வழங்கினார்.

Next Story