நிதி நிறுவனத்தில் திருடியவர் கைது; ரூ.11 லட்சம் நகைகள் பறிமுதல்
மதுரையில் உள்ள நிதி நிறுவனத்தில் திருடியவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் இருந்து ரூ.11 லட்சம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை,
மதுரையில் உள்ள நிதி நிறுவனத்தில் திருடியவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் இருந்து ரூ.11 லட்சம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
நிதி நிறுவனத்தில் திருட்டு
மதுரை திலகர்திடல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மணி நகரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 19-ந்தேதி திருட்டு நடந்தது. அப்போது ரூ.11 லட்சத்து 37 ஆயிரத்து 500 மதிப்பிலான 505 கிராம் எடை கொண்ட தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. இந்த திருட்டில் ஈடுபட்ட குற்றவாளியை கண்டறிய மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில், துணை கமிஷனர் தங்கதுரை தலைமையில், உதவி கமிஷனர் பழனிகுமார் ஆலோசனையின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் தனியார் நிதி நிறுவனத்தில் திருடிய, நிதி நிறுவன அலுவலக உதவியாளர் காளிதாஸ் (வயது 33) என்பவரை போலீசார் நேற்று கைது செய்து திருடப்பட்ட 505 கிராம் நகைகளை மீட்டனர்.
கேமரா திருடியவர் ைகது
இது போல் திடீர் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பெரியார் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த தனியார் தொலைக்காட்சி ஊழியரிடம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள கேமரா உள்ளிட்ட பொருட்களை திருடிய அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் (33) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் கமிஷனர் வெகுவாகப் பாராட்டினார்.
Related Tags :
Next Story