தினந்தந்தி புகார் பெட்டி


தினந்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 3 April 2022 2:19 AM IST (Updated: 3 April 2022 2:19 AM IST)
t-max-icont-min-icon

தினந்தந்தி புகார் பெட்டி

சீரமைக்கப்பட்ட மின்விளக்கு
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 49-வது வார்டில் பிஸ்மி நகர் உள்ளது. இந்த பகுதியில் 1 மற்றும் 2-வது தெருவில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் விளக்குகள் பழுதடைந்து எரியாமல் இருந்தது. இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததின் பேரில் மின்விளக்குகள் சீரமைக்கப்பட்டது. செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
குளம் தூர்வாரப்படுமா?
சகாயநகர் ஊராட்சியில் வண்டனேரி குளம் உள்ளது. இந்த குளத்து நீரை நம்பி 250 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது. குளத்தை முறைப்படி பராமரிக்காததால், தற்போது செடி-கொடிகள் வளர்ந்து உள்ளது. இதனால் இந்த நீரை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் குளத்தின் கரையோரம் வயலுக்கு செல்லும் பாதையில் முட்செடிகள் வளர்ந்துள்ளதால் விவசாயிகள் வயலுக்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே குளத்தை தூர்வாரி பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மு.தர்மராஜன் 
அனந்தபத்மநாபபுரம்.
விபத்து அபாயம்
வடக்கு தாமரைகுளம் பாலத்தில் இருந்து சுடுகாட்டுக்கு செல்லும் சாலையில் பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே சாலையின் ஒரு பகுதியில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இரவு நேரம் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                 -விக்னேஷ், வடக்கு தாமரைகுளம்.
பராமரிக்க வேண்டும்
நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட மடவிளாகம் பகுதியில் பண்டார குளம் உள்ளது.இந்த குளத்தை சுமார் 6-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குளிப்பதற்கு பயன் படுத்தி வந்தனர். அது மட்டுமில்லாமல் இந்த குளத்தை நம்பி விவசாயிகள் உள்ளனர். குளம் பராமரிப்பு இல்லாமல் புற்கள் வளர்ந்து உள்ளது. எனவே குளத்தை தூர்வாரி பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவிகுமார், மொட்டவிளை.
சாலையின் அவலநிலை
திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் காட்டாத்துறை ஊராட்சி மற்றும் கண்ணனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முளகுமூடு- பூவன்கோடு சாலை செல்கிறது. இந்த சாலை சுமார் 3 கி.மீ. தூரம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கடும் மழையால் சாலை சேதமடைந்து கற்களாக காட்சி அளிக்கிறது. இதில் வாகனங்களிலோ, நடந்தோ செல்ல முடியாத அவல நிலை உள்ளது. இந்த சாலை வழியாக சென்ற அரசு பஸ்சும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரேமசுதா, உம்மன்கோடு.

Next Story