பண்ணாரி அருகே கார் மோதி புள்ளிமான் காயம்


பண்ணாரி அருகே கார் மோதி புள்ளிமான் காயம்
x
தினத்தந்தி 3 April 2022 2:54 AM IST (Updated: 3 April 2022 11:09 AM IST)
t-max-icont-min-icon

பண்ணாரி அருகே கார் மோதி புள்ளிமான் காயம்

புஞ்சைபுளியம்பட்டி
கர்நாடக மாநிலம் மைசூர் புது நகரை சேர்ந்தவர் குருராஜ் (வயது73). வியாபாரி. இவர் நேற்று தனக்கு சொந்தமான காரில் மைசூரில் இருந்து கோயம்புத்தூர் சென்று கொண்டிருந்தார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி விநாயகர் கோவில் அருகே சென்றபோது அந்த வழியாக ரோட்டை கடக்க முயன்ற புள்ளிமான் துள்ளி குதித்தது. இதில் கார் எதிர்பாராதவிதமாக புள்ளிமான் மீது மோதியது.
இதில் மான் படுகாயம் அடைந்தது. காரின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கி சேதமடைந்தது. குருராஜ் காயம் அடைந்தார். இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் வனத்துறையினர் அங்கு சென்று மானை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குருராஜ் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story