தலைவாசல், ஆத்தூர், வாழப்பாடி, சேலத்தில் அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்


தலைவாசல், ஆத்தூர், வாழப்பாடி, சேலத்தில் அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 3 April 2022 3:27 AM IST (Updated: 3 April 2022 3:27 AM IST)
t-max-icont-min-icon

தலைவாசல், ஆத்தூர், வாழப்பாடி, சேலத்தில் அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தலை கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

சேலம்,
நீர் மோர் பந்தல்
சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில், கோடை வெயிலை தணிக்கும் பொருட்டு, பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தல்கள் திறக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், வாழப்பாடி பஸ் நிலையத்தில் நீர் மோர் பந்தலை கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்து பேசினார். 
இதில், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைருவம், சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான ஆர்.இளங்கோவன், ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ. சித்ரா, வாழப்பாடி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சதீஷ்குமார், நகர செயலாளர் சிவக்குமார் மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும், தர்பூசணி, வெள்ளரி மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது.
ஆத்தூர்
ஆத்தூர் கடைவீதியில் அ.தி.மு.க. கட்சி அலுவலகம் எதிரே கட்சியின் சார்பில் நீர் மோர் பந்தலை, தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் கோடை வெயிலின் தாக்கத்தை போக்கும் வகையில் பொதுமக்களுக்கு மோர், இளநீர், தர்பூசணி பழம். கம்மங்கூழ் ஆகியவற்றை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன், ஆத்தூர் நகர அ.தி.மு.க. செயலாளர் மோகன், ஒன்றிய செயலாளர்கள் ஆத்தூர் ரஞ்சித்குமார், சேகர், பெத்தநாயக்கன்பாளையம் முருகேசன், மோகன், நரசிங்கபுரம் நகரச்செயலாளர் மணிவண்ணன், மாவட்ட மகளிரணி செயலாளர் பொன்னம்மாள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
தலைவாசல்
தலைவாசலில் உள்ள கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி அலுவலகம் எதிரில் தலைவாசல் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவரும், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான ஆர்.இளங்கோவன் தலைமை தாங்கினார். தலைவாசல் ஒன்றிய குழு தலைவர் ராமசாமி வரவேற்று பேசினார். எம்.எல்.ஏ.க்கள் நல்லதம்பி, ஜெயசங்கரன், தலைவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், கெங்கவல்லி கிழக்கு ஒன்றிய செயலாளர் கூடமலை ராஜா, மேற்கு ஒன்றிய செயலாளர் துரை ரமேஷ், ஜெயலலிதா பேரவை நிர்வாகி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய நகர, கிளை, நிர்வாகிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு தலைவர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 
சேலம் கொண்டலாம்பட்டி
சேலம் கொண்டலாம்பட்டி பை பாஸ் பகுதியில் வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே நேற்று அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரும், மாநில மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான இளங்கோவன் தலைமை தாங்கினார். விழாவிற்கு வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ. ராஜா என்ற ராஜமுத்து, சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணியம், ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ. சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனி சாமி கலந்து கொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பனமரத்துப்பட்டி மேற்கு ஜெகநாதன், கிழக்கு பாலச்சந்திரன், வீரபாண்டி மேற்கு வருதராஜ், வீரபாண்டி கிழக்கு வெங்கடேஷ், சேலம் கிழக்கு வையாபுரி மற்றும் கட்சியின் ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story