மலை மாதேஸ்வரன் கோவிலில் யுகாதி பண்டிகையையொட்டி பெரிய தேரோட்டம்


மலை மாதேஸ்வரன் கோவிலில் யுகாதி பண்டிகையையொட்டி பெரிய தேரோட்டம்
x
தினத்தந்தி 3 April 2022 3:27 AM IST (Updated: 3 April 2022 3:27 AM IST)
t-max-icont-min-icon

மலை மாதேஸ்வரன் கோவிலில் யுகாதி பண்டிகையையொட்டி பெரிய தேரோட்டம் நடந்தது.

கொளத்தூர்,
சேலம் மாவட்ட எல்லையின் அருகே கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகால் தாலுகாவில் மாதேஸ்வரன் மலையில், மலை மாதேஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று யுகாதி பண்டிகையையொட்டி பெரிய தேரோட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
முன்னதாக பெரிய தேர் கோவில் வெளி பிரகாரத்தில் வலம் வந்த போது, பக்தர்கள் மரிக்கொழுந்து சொருகிய வாழைப்பழத்தை தேர் மீது வீசி  தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் அவர்கள் பக்தி கோஷமிட்டு சாமியை வணங்கினர். பெரிய தேர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உலா வந்தது. பெரிய தேருக்கு முன்னதாக, பசுத்தேர், புலித்தேர் ருத்ராட்ச தேர் ஆகியன வலம் வந்தன. யுகாதி பண்டிகையையொட்டி மலை மாதேஸ்வரன் கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

Next Story