சேலம் மாவட்டத்தில் 27-வது மெகா முகாமில் 26,813 பேருக்கு கொரோனா தடுப்பூசி
சேலம் மாவட்டத்தில் நடந்த 27-வது மெகா முகாமில் 26 ஆயிரத்து 813 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சேலம்
சேலம் மாவட்டத்தில் வாரம் ஒரு மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 26 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 7 லட்சத்து 47 ஆயிரத்து 794 பேருக்கு முதல் தவணையும், 9 லட்சத்து 73 ஆயிரத்து 369 பேருக்கு இரண்டாம் தவணையும் என மொத்தம் 17 லட்சத்து 21 ஆயிரத்து 163 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில், நேற்று 27-வது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. ஊரகப் பகுதியில் 865 மற்றும் சேலம் மாநகராட்சி பகுதியில் 205 என மொத்தம் 1,070 தடுப்பூசி மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மெகா முகாம் நடந்தது. ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் நேற்று 2-வது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர். இதுவரை தடுப்பூசி போடாதவர்களில் சிலரும் சிறப்பு முகாமிற்கு வந்து தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர். முடிவில், சேலம் மாநகராட்சி பகுதியில் 1,598 பேரும், சேலம் ரூரல் பகுதியில் 18 ஆயிரத்து 32 பேருக்கும், ஆத்தூர் பகுதியில் 7 ஆயிரத்து 183 பேரும் என மொத்தம் 26 ஆயிரத்து 813 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story