சுகாதாரத்துறை சார்பில் நர்சுகளுக்கு புள்ளியியல் பயிற்சி


சுகாதாரத்துறை சார்பில் நர்சுகளுக்கு புள்ளியியல் பயிற்சி
x
தினத்தந்தி 3 April 2022 3:34 PM IST (Updated: 3 April 2022 3:34 PM IST)
t-max-icont-min-icon

சுகாதார துறை சார்பில் நர்சுகளுக்கு புள்ளியியல் பயிற்சி அளிக்கப்பட்டது.

வாணியம்பாடி

சுகாதார துறை சார்பில் நர்சுகளுக்கு புள்ளியியல் பயிற்சி அளிக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், சுகாதார நிலைய டாக்டர்கள், நர்சுகள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு புள்ளியியல் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முகாமை ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தொடங்கி வைத்தார்.

மாநில புள்ளியியல் அலுவலர் சுந்தரி, உதவியாளர் உமாராணி, மாவட்ட புள்ளியியல் அலுவலர் அம்பேத்கர் மற்றும் குடும்ப நல அலுவலர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

Next Story