வனப்பகுதியில் குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பு பணி


வனப்பகுதியில் குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பு பணி
x
தினத்தந்தி 3 April 2022 4:50 PM IST (Updated: 3 April 2022 4:50 PM IST)
t-max-icont-min-icon

கோடை வெயில் சுட்டெரிப்பதால் வனப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்பக்கம் உள்ள மலையை சுற்றி வனப்பகுதியில் மான்கள், கட்டுப்பன்றிகள், செந்நாய்கள், குரங்குகள் எனப் பல்வேறு வகையான விலங்குகள் உள்ளன. வனவிலங்குகளை பாதுகாக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகளில் கிடந்த தண்ணீர் குறைய தொடங்கியது. இதனால் மான்கள் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு ெவளிேயறி குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன. அவ்வாறு வரும் மான்களை தெரு நாய்கள் துரத்தி கடித்து கொன்று விடுகின்றன. 

வன விலங்குகள் காட்டில் இருந்து தண்ணீர் தேடி வெளியே வராமல் இருக்க, வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரம்பும் பணி நடந்தது. இதுகுறித்து வனச்சரக அலுவலர் சீனுவாசன் கூறுகையில், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள மலையை சுற்றி வனப்பகுதியில் 14 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் உள்ளன. 

இந்த தண்ணீர் தொட்டி 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும். கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே செல்லாமல் இருக்க தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி நடப்பதாக, கூறினார்.

Next Story