சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கடந்த 3 நாட்களில் 24½ கிலோ கஞ்சா பறிமுதல்


சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கடந்த 3 நாட்களில் 24½ கிலோ கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 3 April 2022 5:07 PM IST (Updated: 3 April 2022 5:07 PM IST)
t-max-icont-min-icon

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கடந்த 3 நாட்களில் 24½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

வெளிமாநிலத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கஞ்சா கடத்தி வருவதாக ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் இன்ஸ்பெக்டர்கள் சசிகலா மற்றும் வடிவுக்கரசி தலைமையிலான ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கடந்த 31-ந்தேதி ஹவுராவில் இருந்து சென்னை சென்டிரல் வந்த எக்ஸ்பிரஸ் (வண்டிஎண்:12839) ரெயிலில் மொத்தம் 20½ கிலோ கஞ்சா சென்டிரல் ரெயில்வே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் விசாகப்பட்டினத்தில் இருந்து 12½ கிலோ கஞ்சாவை கடத்தி வந்த கேரளாவை சேர்ந்த நந்து (வயது 25) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை சென்டிரல் ரெயில்நிலையம் 9-வது நடைமேடையில் வந்து நின்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டி-2 பெட்டியில் கேட்பாரற்று கிடந்த 2 பைகளை போலீசார் கைப்பற்றினர். அதை சோதனை செய்ததில் 4 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் போதைபொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 3 நாட்களில் மட்டும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் 24½ கிலோ கஞ்சா ரெயில்வே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story