மினி பஸ் கார் மோதல் நிதி நிறுவன அதிபர் பலி


மினி பஸ் கார் மோதல் நிதி நிறுவன அதிபர் பலி
x
தினத்தந்தி 3 April 2022 5:58 PM IST (Updated: 3 April 2022 5:58 PM IST)
t-max-icont-min-icon

மினி பஸ் கார் மோதல் நிதி நிறுவன அதிபர் பலி

காங்கயம்  அருகே மினி பஸ் மற்றும் கார் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் நிதிநிறுவன அதிபர் பலியானார். இந்த விபத்தில்  24 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். 
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
நிறுவன நிறுவன அதிபர் பலி
திருப்பூர் ராக்கியபாளையம் பகுதியை சேர்ந்தவர் போஸ்மணி வயது 43. இவர் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் ஒரு காரில் திண்டுக்கல் மாவட்டம் சேடசந்தூர் சென்றார்.பின்னர் காரில் திருப்பூர் திரும்பினார். இவருடைய கார் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே படியூரில் நேற்று முன்தினம் இரவு  11.30 மணிக்கு வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிரே நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து ஒரு மின் பஸ் காங்கேயம் அருகே கீரனூர் நோக்கி சென்றனர். இந்த மினி பஸ்சில் டிரைவர் உள்பட  24 பேர் இருந்தனர். கீரனூரில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள அவர்கள் சென்றனர். 
இந்த நிலையில் போஸ்மணி ஓட்டிவந்த காரும், மினிபஸ்சும் படியூர் சம்பந்தம்பாளையம் பிரிவு அருகே நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மினி பஸ்சின் அடி பகுதியில் பார் புகுந்தது. அதாவது காரின் பெரும்பகுதி பஸ்சுக்குள் சென்றது. காரும் பஸ்சும் மோதிக்கொண்டவுடன் அவை இரண்டும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் மினி பஸ்சில் இருந்தவர்கள் ஜன்னல் வழியாகவும், இரண்டு வாசல்கள் வழியாகவும் கீழேகுதித்து உயிர்தப்பினர். இதற்கிடையில் இந்த தீ மளமள சென்று பரவு இரண்டு வாகனமும் முழுவதும் எரிய தொடங்கியது. ஆனால் காரை ஓட்டிச்சென்ற  போஸ்மணியால் வெளியே வரமுடியவில்லை. இதனால் அபயக்குரல் எழுப்பினார். ஆனால் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததாலும், அவர் வந்த கார், பஸ்சின் அடிப்பகுதியில் வசமாக சிக்கிக்கொண்டதாலும் அவரை மீட்க முடிவில்ைல. இதனால் சிறிது நேரத்தில் அவர் உடல் கருகி பலியானார். 
தீயை அணைத்தனர்
 இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக காங்கயம் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு நிலைய வாகன ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்க போராடினர். சுமார் 1 மணி நேர போராட்டதிற்கு பின்  விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை வருகின்றனர். காங்கேயம் அருகே மினி பஸசும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாகனங்களும் தீயில் கருகி, நிதி நிறுவன அதிபர் உயிரிழந்த சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story