அடுத்த மாதம் 12ந் தேதி தேரோட்டம்
அடுத்த மாதம் 12ந் தேதி தேரோட்டம்
அவினாசிலிங்கேசுவரர் கோவில் தேரோட்டம் அடுத்த மாதம் 12 ந் தேதி நடக்கிறது. தேர் இழுக்கும் நேரம் குறித்து இருதரப்பினரிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.
அவினாசி லிங்கேஸ்வரர் கோவில்
அவினாசியில் கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதனமையானது. இந்த கோவிலில் தமிழகத்தில் மூன்றாவது பெரிய தேர் உள்ளது. இந்த கோவில் தேரோட்டம் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும். கடந்த 2020, 2021 ஆண்டுகளில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர்த்திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு மே மாதம் 12 ந் தேதி தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆலோசனை கூட்டம் அவினாசிலிங்கேசுவரா கோவிலில் செயல் அலுவலர் பெரியமருதுபாண்டி தலைமையில் நடந்தது. இதில் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அதில் வழக்கம்போல் காலை 10 மணிக்கு திருத்தேர் வடம்பிடிப்பது என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது ஒரு தரப்பினர் பகல் நேரத்தில் வடம்பிடிப்பதை தவிர்த்து மாலை வேளையில் தேர் வடம்பிடித்து சிறிது இழுத்து நிறுத்தி மீண்டும் அடுத்த நாள் தேர் இழுக்கவேண்டும் என்றனர். அப்போது மற்றொரு தரப்பினர் தேர்த்திருவிழா நாளன்று மாலை நேரத்தில் அவினாசி காந்திபுரத்திலிருந்து காமாட்சியம்மன் தேர், பறவை காவடி ஆகியவை தேர் வீதியில் வலம் வருவது வழக்கம். இதனால் திருவிழாவில் குழப்பம் மற்றும் இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வழக்கத்தை மாற்றக் கூடாது என்றனர்.
அரசு உத்தரவுபடி தேரோட்டம்
இதையடுத்து கோவில் செயல் அலுவலர் பெரியமருதுபாண்டி கூறுகையில் அரசு உத்தரவில் தேர் இழுப்பதில் என்ன விதிமுறைகள் உள்ளதோ அதன்படி நடைமுறைபடுத்தப்படும். இதற்கு அனைவரும் கட்டுப்பட்டு ஒற்றுமையுடன் தேர்த்திருவிழா நடைபெற ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story