ஜோலார்பேட்டை அருேக ரெயில்ேவ ஊழியர் வீட்டில் 30 பவுன் நகை, பணத்தை கொள்ளை
ஜோலார்பேட்டை அருேக ரெயில்ேவ ஊழியர் வீட்டில் 30 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார்தேடி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருேக ரெயில்ேவ ஊழியர் வீட்டில் 30 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ரெயில்வே ஊழியர்
ஜோலார்பேட்டைைய அடுத்த தாமலேரிமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மையப்பன்நகர் அருகே கே.பி.வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வீரபத்திரன் (வயது 55), சென்னையில் ரெயில்வே கார்டாக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி பத்மா (48). இவர்களுக்கு பிரகாஷ் (32), பிரதாப் (27) என்ற மகன்களும், சரளாதேவி (30) என்ற மகளும் உள்ளனர்.
பிரகாஷ் சென்னையில் ரெயில் என்ஜின் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி ஸ்ரீமதி. இருவரும் சென்னையில் வசித்து வருகின்றனர். வீரபத்திரனும், பத்மாவும் தனது மகன் பிரகாசை பார்க்க சென்னை சென்றனர். இளைய மகன் பிரதாப் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
நகை கொள்ைள
நேற்று முன்தினம் இரவு பிரதாப், அறையில் படுத்துத் தூங்கி கொண்டிருந்தார். மர்மநபர் யாரோ வீட்டுக்குள் நுழைந்து, அவர் தூங்கி கொண்டிருந்த அறைக்கு பக்கத்தில் இருந்த மற்றொரு அறைக்குள் நுழைந்து, சாவியை எடுத்து பிரோவில் வைத்திருந்த 30 பவுன் நகை, ரூ.3 ஆயிரம், விலை உயர்ந்த செல்போன், வெள்ளிக்கொலுசு ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
பிரதாப் நேற்று காலை 6 மணியளவில் எழுந்து பார்த்தபோது, பக்கத்துக்கு அறை மற்றும் பீரோ திறந்து இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் நுழைந்து யாரோ கொள்ைளயடித்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story