உடுமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


உடுமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 3 April 2022 6:26 PM IST (Updated: 3 April 2022 6:26 PM IST)
t-max-icont-min-icon

உடுமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

உடுமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. 
ஆக்கிரமிப்புகள்
உடுமலை நகராட்சி பகுதியில் கல்பனாசாலை, பொள்ளாச்சி சாலை, ராஜேந்திரா சாலை, வெங்கடகிருஷ்ணா சாலை, கச்சேரி வீதி உள்ளிட்ட பல சாலைகளில் கடைகள் அதிகம் உள்ளது. இதில் சில கடைக்காரர்கள், கடைகளுக்கு முன்பகுதியை ஆக்கிரமித்து விரிவுபடுத்தியுள்ளனர். சிலர் கடைக்கு வெளியே ஸ்லாப் கற்களை பதித்துள்ளனர்.
மழைநீர் வடிகால்கள் கட்டியுள்ள பகுதியில் மழைநீர், அந்த வடிகாலுக்குள் செல்லும் வகையில் ஆங்காங்கு சிறுவழிகள் ஓட்டைகள் விட்டு கட்டப்பட்டுள்ளன. ஆனால் சிலகடைக்காரர்கள் அந்த இடத்தை மேடாக்கி கடைக்கு நடைபாதையாக அமைத்துள்ளனர். அதனால் மழைத்தண்ணீர் மழைநீர் வடிகாலுக்குள் செல்லாமல், சாலையில் ஓடும் நிலை ஏற்படுகிறது.
பொக்லைன் மூலம் அகற்றம்
இதைத்தொடர்ந்து அங்கு கான்கிரீட் தளம் அமைத்தும், ஸ்லாப் கற்கள் போட்டும், மண்போட்டும் மேடாக அமைக்கப்பட்டுள்ள பகுதிகளை அப்புறப்படுத்தி மழைநீர், வடிகாலுக்குள் செல்லும் வகையில் அந்த இடத்தை சமன்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதன்படி நேற்று  மத்திய பஸ் நிலையம் அருகே கல்பனா சாலை மற்றும் பொள்ளாச்சி சாலை பகுதிகளில் இந்த பணிகள் நடந்தது. இந்த ஆக்கிரமிப்புகள் பொக்லைன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து சில கடைக்காரர்கள், தங்களது கடைகளுக்கு முன்பு பதித்திருந்த ஸ்லாப் கற்களை தாங்களாகவே அகற்றிக்கொண்டனர். இதேபோன்று ஒவ்வொரு சாலைப்பகுதியிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story