பரமத்திவேலூர் அருகே, காதல் பிரச்சினையில் இரு குடும்பத்தினர் இடையே தகராறு; 3 பேர் கைது


பரமத்திவேலூர் அருகே, காதல் பிரச்சினையில் இரு குடும்பத்தினர் இடையே தகராறு; 3 பேர் கைது
x
தினத்தந்தி 3 April 2022 6:42 PM IST (Updated: 3 April 2022 6:42 PM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூர் அருகே, காதல் பிரச்சினையில் இரு குடும்பத்தினர் இடையே தகராறு; 3 பேர் கைது

பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் தாலுகா குப்புச்சிபாளையம் மண்டபத்துபாறையை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 48). கூலித்தொழிலாளி. இவரது மகள் நர்மதாவை அதே ஊரை சேர்ந்த கிள்ளி என்கிற தினேஷ் (21) என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தினேஷ் குடும்பத்தினருக்கும், பழனியப்பன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 
இந்த நிலையில் சம்பவத்தன்று தினேஷ், பழனியப்பன் வீட்டிற்கு சென்று தகராறு செய்தாராம். இதுகுறித்து பழனியப்பன் மோகனூர் அருகே மணப்பள்ளி அண்ணா நகரில் உள்ள அவரது சகோதரர் கதிர்வேல் (38), அவரது மனைவி சித்ரா (32) மற்றும் சித்ராவின் சகோதரர்கள் சுரேஷ் (30), ரமேஷ் (29) ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து கேட்க வந்த அவர்களை தினேஷ் மற்றும் அவரது உறவினர்களான குப்புச்சிபாளையம் சனப்பன் காடு பகுதியை சேர்ந்த ஆனந்தன் (55) அவரது மகன்கள் லோகநாதன் (25), லோகேஸ்வரன் (19) உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து கதிர்வேல், சித்ரா,  சுரேஷ் மற்றும் ரமேஷ் ஆகிய 4 பேரையும் திட்டி தாக்கினர்.
இதுதொடர்பாக பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேசை கைது செய்தனர். மேலும் ஆனந்தன், லோகநாதன், லோகேஸ்வரன் ஆகியோர் பரமத்தி போலீஸ் நிலையத்தில் ரமேஷ், சுரேஷ், கதிர்வேல், அவரது மனைவி சித்ரா, பழனியப்பன், அவரது மனைவி வசந்தி, சந்திரன் (32) மற்றும் கோவை மாவட்டம் பேரூர் பெரியார் காலனியை சேர்ந்த சங்கர் (30) உள்ளிட்ட 8 பேர் தங்களை‌ தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பரமத்தி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். 
அதன்பேரில் போலீசார் தினேஷ், சந்திரன் மற்றும் சங்கர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான பழனியப்பன் மற்றும் சித்ரா ஆகியோரை தேடி வருகின்றனர். லோகநாதன், ஆனந்தன், லோகேஷ்வரன், ரமேஷ், சுரேஷ், வசந்தி, கதிர்வேல் ஆகிய 7 பேரும் வேலூர், நாமக்கல் மற்றும் சேலம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
======

Next Story