மன அழுத்தத்திற்கு இலக்கியம் தீர்வாக இருக்கிறது. கலெக்டர் அமர்குஷ்வாஹா பேச்சு


மன அழுத்தத்திற்கு இலக்கியம் தீர்வாக இருக்கிறது. கலெக்டர் அமர்குஷ்வாஹா பேச்சு
x
தினத்தந்தி 3 April 2022 6:43 PM IST (Updated: 3 April 2022 6:43 PM IST)
t-max-icont-min-icon

மன அழுத்தத்திற்கு இலக்கியம் தீர்வாக இருக்கிறது என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.

திருப்பத்தூர்

மன அழுத்தத்திற்கு இலக்கியம் தீர்வாக இருக்கிறது என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.

புத்தக கண்காட்சி

திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட இலக்கிய, கலை மற்றும் பண்பாட்டு மன்றம் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சியுடன் இணைந்து முதலாவது இலக்கிய திருவிழா தூய நெஞ்ச கல்லூரியில் நடத்தப்படுகிறது. இதன் தொடக்கவிழா நடந்தது.  மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா, எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். எம்.எல்.ஏக்கள் க.தேவராஜி, ஏ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் கலெக்டர் அமர்குஷ்வாஹா பேசியதாவது:-

பயன்பெற வேண்டும்

ஒரு தனிமனித அளவில், குடும்ப அளவில், சமூதாய அளவிலான 3 விதமான மனஅழுத்தம் ஏற்படுகிறது. அனைத்து விதமான மக்களின் பதற்றம் மற்றும் மனஅழுத்தம் உள்ளிட்ட அனைத்திற்கும் தீர்வு உங்கள் சந்தோஷத்திற்கும், மனநிறைவிற்கும் இலக்கியம் மிகவும் அவசியமாக இருக்கிறது. இலக்கியத் திருவிழாவிற்கு 48-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் வர உள்ளனர். 200 புத்தக பதிப்பாளர்கள் புத்தக கடைகள் அமைத்துள்ளனர். இந்தப் புத்தகத் திருவிழா வருகிற 9-ந் தேதி வரை வரை நடைபெறும். 

60-க்கும் மேற்பட்ட அரங்கங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களும் இந்த கண்காட்சியில் உள்ளது. மேலும் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை இரண்டு பிரிவுகளாக பட்டிமன்றம், இலக்கிய விவாதம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் முன்னணி எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் மற்றும் இலக்கியவாதிகள் கலந்து கொண்டு பேசுகின்றனர். எனவே அனைத்து பொதுமக்களும் இலக்கிய திருவிழாவில் கலந்து கொண்டு புத்தகத்தை படித்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஷ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தலைவர் எஸ்.ராஜேந்திரன், தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, கல்லூரி முதல்வர் மரியஅந்தோணிராஜ், பேராசிரியர் பார்த்திபராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புத்தகண்காட்சியை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு பள்ளி, மாணவிகள் வருகைதந்து புத்தக கண்காட்சியை பார்வையிட்டனர். மேலும் அவர்கள் கலெக்டருடன் உரையாடினர்.

Next Story