எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்


எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்
x
தினத்தந்தி 3 April 2022 6:50 PM IST (Updated: 3 April 2022 6:50 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 5-வது தளத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இன்று 4- ந் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 5-வது தளத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இன்று 4- ந் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
மாணவர் சேர்க்கை
ராமநாதபுரத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி முதல்- அமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்கியது. முதல்கட்டமாக ராமநாதபுரத்தில் 100 மாணவர்கள் சேர்க்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன. 
இதனை தொடர்ந்து மீதம் உள்ள 50 இடங்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டிடம் கட்டும் வரை 2 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் எய்ம்ஸ் மாணவர்களை சேர்க்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 
அதன்படி மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவ-மாணவிகளில் 50 பேருக்கு ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் வைத்து பாடங்கள், செயல்முறை வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதற்காக எய்ம்ஸ் அதிகாரிகள் குழுவினர் தொடர் ஆய்வு செய்து தேவையான கட்டமைப்புகளை உறுதிசெய்துள்ளனர். 
8 பேராசிரியர்கள்
ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் 5-வது தளம் முழுமையாக எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. இங்கு கல்லூரி வகுப்பறைகள், ஆய்வகங்கள், விடுதிகள், அலுவலக கட்டிடங்கள் என அனைத்து கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் செயல்பட உள்ள இந்த எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்காக உடற்கூறுயியல், உடலியங்கியல், பயோகெமிஸ்ட்ரி மற்றும் சமூகம் சார்ந்த மருத்துவத்துறைக்கு என மொத்தம் 8 பேராசிரியர்கள் வந்துள்ளனர். மீதம் உள்ள பேராசிரியர்கள் வர உள்ளனர். 
இதுதவிர மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு வசதியாக ஸ்மார்ட் வகுப்பறைகள், உலகத் தரத்திலான விரிவுரை அரங்குகள், டிஜிட்டல் நூலகம், ஆய்வகம், பயிற்சிக்கூடம் உடற்கூறு அறுவை அரங்குகள் போன்றவையும் ஏற்படுத்தப் பட்டு உள்ளன. தனித்தனி விடுதி வசதிகள் என ரூ.4 கோடியில் எய்ம்ஸ் கல்லூரிக்கு வசதிகள் ஏற்படுத்தப் பட்டு உள்ளன.
இன்று தொடக்கம்
இந்தநிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் 50 பேருக்கு ராமநாதபுரத்தில் இன்று (4-ந் தேதி) முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு முதல்கட்டமாக வழிகாட்டுதல் நெறி முறைகள் குறித்த வகுப்பு நடத்தப்பட்டது. இன்று காலை முதல் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கி நடைபெற உள்ளது.

Next Story