நடுக்கடலில் தவறி விழுந்த மீனவரை தேடும் பணி தீவிரம்


நடுக்கடலில் தவறி விழுந்த  மீனவரை தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 3 April 2022 6:53 PM IST (Updated: 3 April 2022 6:53 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே கடலில் தவறி விழுந்த மீனவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது

தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே கடலில் தவறி விழுந்த மீனவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மீனவர்
தூத்துக்குடி டி.சவேரியார்புரத்தை சேர்ந்தவர் ஜூலியட்ராஜ். இவர் கடந்த 23-ந் தேதி தருவைகுளத்தில் இருந்து 9 பேருடன் விசைப்படகில் மீன்பிடிக்க சென்றாராம். இவர்கள் மீன்பிடித்து விட்டு கடந்த 1-ந் தேதி கன்னியாகுமரிக்கு மேற்கே 77 கடல்மைல் தொலைவில் தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டு இருந்தனர். அப்போது, படகில் இருந்த ஜூலியட் எதிர்பாராத விதமாக தவறி கடலில் விழுந்து விட்டதாக கூறப்படுகிறது.
தேடும் பணி
இதைத் தொடர்ந்து படகில் இருந்த மற்ற மீனவர்கள் ஜூலியட்டை தேடி வருகின்றனர். இது குறித்து மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து கடலில் தவறி விழுந்த மீனவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் அவரது உறவினர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

Next Story