வல்லநாட்டில் பொதுமக்கள் திடீர் சாலைமறியல்
கோவிலுக்கு சுற்றுச்சுவர் கட்ட தனிநபர் எதிர்ப்பு தெரிவித்ததால், வல்லநாட்டில் பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்
ஸ்ரீவைகுண்டம்:
கோவிலுக்கு சுற்றுச்சுவர் கட்ட தனிநபர் எதிர்ப்பு தெரிவித்ததால், வல்லநாட்டில் பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சாலைமறியல்
வல்லநாடு நாற்கர சாலை அருகில் பார்வதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவிலுக்கு பின்புறம் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நேற்று காலையில் தொடங்கியது.
அப்போது கோவிலின் அருகில் உள்ள வீட்டில் வசித்த நபர், சுற்றுச்சுவர் அமைக்கும் இடமானது தனது நிலத்தில் உள்ளது என்று கூறி, பணிகளை தடுத்தார். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், கோவிலுக்கு சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தியும், கோவில் அருகில் நாற்கரசாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
உடனே தாசில்தார் ராதாகிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு சம்பத் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து காம்பவுண்டு சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தவரின் குடும்பத்தினரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கோவிலுக்கு பின்புறம் சுற்றுச்சுவர் அமைப்பதற்கு அந்த நபர் அனுமதித்தார். தொடர்ந்து அங்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தொடங்கியது. அதன்பிறகு போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story