தூத்துக்குடி அருகே கட்டிட கட்டுமான பொருட்களை திருடிய வாலிபர் கைது
தூத்துக்குடி அருகே கட்டிட கட்டுமான பொருட்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை, இந்திரா நகரை சேர்ந்தவர் ஆரோக்கியம். இவருடைய மகன் பொன்ராஜ் (வயது 46). இவர் சென்டிரிங் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் புதுக்கோட்டை செல்வம் சிட்டி பகுதியில் ஒரு வீட்டிற்கு சென்ட்ரிங் வேலைக்காக 45 சென்ட்ரிங் சீட்டுகளை அங்கு வைத்து இருந்தாராம். இந்த நிலையில் யாரோ மர்ம ஆசாமிகள் 15 சென்டிரிங் சீட்டுகளை திருடி சென்று விட்டார்களாம். இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம் என்று கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பேரூரணி, ராஜாராமன் நகர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் முத்து சுந்தர் (20) என்பவர் சென்டிரிங் சீட்டுகளை திருடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் சுந்தரை கைது செய்து, அவரிடம் இருந்து சென்டிரிங் சீட்டுகளையும் மீட்டனர். கைது செய்யப்பட்ட சுந்தர் மீது ஏற்கனவே 4 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story