மனைவி தாய் வீட்டுக்கு சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


மனைவி தாய் வீட்டுக்கு சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 3 April 2022 7:18 PM IST (Updated: 3 April 2022 7:18 PM IST)
t-max-icont-min-icon

மனைவி தாய் வீட்டுக்கு சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கலவை

கலவையை அடுத்த நாகலேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 70). இவருக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது. கடைசி மகனாகிய இளங்கோவுக்கும் (30) பெருங்கோட்டூர் கிராமத்தில் உள்ள மணிவண்ணனின் மகள் ஜெயலட்சுமிக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 

இளங்கோ ராணிப்பேட்டை பெல் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு குழந்தை இல்லை. இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்படும். அவர்களை கன்னியப்பன் சமரசம் செய்வார்.   இளங்கோவுக்கும், ஜெயலட்சுமிக்கும் இடைேய  வாய்த்தகராறு ஏற்பட்டது. ஜெயலட்சுமி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்குச் சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த இளங்கோ இரவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து கலவை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story