கம்பம் காமாட்சியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா
கம்பம் காமாட்சியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடந்தது.
கம்பம்:
கம்பம் வரதராஜபுரத்தில் விஸ்வகர்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட காமாட்சியம்மன் கோவில் உள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோவிலில் பங்குனி திருவிழா நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வையொட்டி இன்று திருவிழா நடைபெற்றது. இதையடுத்து பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். காமாட்சியம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் உற்சவரை வைத்து மேளதாளம் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு சென்றனர். ஊர்வலம் கோவிலில் தொடங்கி ரேஞ்சர் அலுவலக தெரு, மணிநகரம், பார்க்ரோடு, வேலப்பர்கோவில், அரசமரம், மாரியம்மன் கோவில், காளவாசல் வழியாக மீண்டும் கோவிலில் நிறைவடைந்தது.
Related Tags :
Next Story