விவசாயி மீது தாக்குதல் 9 பேர் மீது வழக்கு


விவசாயி மீது தாக்குதல் 9 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 3 April 2022 9:01 PM IST (Updated: 3 April 2022 9:01 PM IST)
t-max-icont-min-icon

விவசாயி மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

போடி:
போடி சுப்புராஜ் நகர் புதுகாலனியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி(வயது 39).  விவசாயி. இவர் ஜெயசீலன் என்பவரிடம் இருந்து போடி அருகே உள்ள மேலச்சொக்கநாதபுரம் கிராமத்தில் சுமார் 12½ சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கினார். இதைத்தொடர்ந்து ஜெயசீலனின் மகன்கள் ஜோதிமுத்து, பிரபு, செந்தில் குமார் ஆகியோருக்கும் செல்லப்பாண்டிக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. சம்பவத்தன்று இவர்கள் 3 பேரும் தங்களது நண்பர் குமார் உள்பட சிலருடன் சேர்ந்து செல்லப்பாண்டியை  தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 
இதுகுறித்து செல்லப்பாண்டி போடி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஜோதிமுத்து, பிரபு, செந்தில்குமார், குமார் மற்றும் 5 பேர் என மொத்தம் 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story