நாகூரில் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
ரமலான் நோன்பு தொடங்கப்பட்டதால் நாகூரில் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.
நாகூர்:
ரமலான் நோன்பு தொடங்கப்பட்டதால் நாகூரில் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.
ரமலான் நோன்பு தொடக்கம்
இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கடைப்பிடிப்பது வழக்கம். இந்த ரமலான் மாதத்தில் பிறை தென்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்கு அதிகாலை 4.30 மணி முதல் மாலை 6.30 வரை இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ரமலான் பிறை தென்பட்டதால் ரமலான் நோன்பு தொடங்குவதாக அரசு தலைமை காஜி அறிவித்தார்.
சிறப்பு தொழுகை
இதை தொடர்ந்து நேற்று முதல் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு கடைபிடிக்க தொடங்கினர். இந்த நிலையில் நாகூரில் உள்ள புகழ் பெற்ற ஆண்டவர் தர்கா உள்புறம் உள்ள நவாப் ஜாமியபள்ளி, காதிரிய்யா மதரசா பள்ளிவாசல் உள்பட பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story