பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்
வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் படையெடுத்தனர். அவர்கள் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பழனி:

பழனி முருகன் கோவில்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.
நேற்று வாரவிடுமுறை என்பதால் பழனிக்கு பக்தர்கள் வருகை அதிக அளவில் இருந்தது. குறிப்பாக சேலம், நாமக்கல், கரூர், கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள், கேரளாவை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் வந்தனர். இதனால் மலைக்கோவிலில் தரிசன வழிகளில் 2 மணி நேரம் காத்திருந்த பின்னரே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அதிகாலை முதலே கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் பழனிக்கு படையெடுத்ததால் அடிவாரம் ரோடு, பூங்கா ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அவதியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பழனி போக்குவரத்து போலீசார், போக்குவரத்தை சீரமைத்தனர்.
தீர்த்தக்காவடி
இதற்கிடையே கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலரும் தீர்த்தக்காவடி, மயில்காவடி எடுத்து மேளதாளத்துடன் கிரிவீதிகளில் வலம் வந்தனர். மேலும் ரோப்கார், மின்இழுவை ரெயில் நிலையத்திலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு சென்றனர்.
பழனி பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் நிலவி வருகிறது. நேற்றும் காலை முதலே கடும் வெயில் சுட்டெரித்தது. இருந்தபோதிலும் பக்தர்கள், பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

Related Tags :
Next Story