ஆபத்தான மின்கம்பம் அகற்றம்


ஆபத்தான மின்கம்பம் அகற்றம்
x
தினத்தந்தி 3 April 2022 9:17 PM IST (Updated: 3 April 2022 9:17 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக திருமருகல் அருகே ஆபத்தான மின்கம்பம் அகற்றப்பட்டு புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.

திட்டச்சேரி:
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக திருமருகல் அருகே ஆபத்தான மின்கம்பம் அகற்றப்பட்டு புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான மின்கம்பம்
 திருமருகல் அருகே ஏனங்குடி ஊராட்சி உள்ளது. இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த பகுதியில் திருமருகல்-நன்னிலம் மெயின் சாலையில் பல மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஏனங்குடி பஸ் நிலையம் அருகில் ஒரு மின்கம்பம் சேதமடைந்து வளைந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டது.
இந்த வழியாக நாகூர், நாகை, திட்டச்சேரி, திருமருகல், நன்னிலம், திருவாரூர், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம், வேலூர், மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த வழியாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் நாகை, திருவாரூர், காரைக்கால் பகுதிகளுக்கு வாகனங்களில் சென்று வருகின்றனர்.
 அகற்ற கோரிக்கை
ஆபத்தான நிலையில் காணப்படும் மின்கம்பம் எந்த நேரத்திலும் சாலையில் சாய்ந்து விழுந்து விடுமோ? என்ற அச்சத்தில் அந்த வழியாக வாகன ஓட்டிகள் சென்று வந்தனர். 
இந்த சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதிகாரிகள் நடவடிக்கை
இதுகுறித்த செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழில் கடந்த 16-ந் தேதி படத்துடன் வெளிவந்தது. இதன் எதிரொலியாக  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான மின்கம்பத்தை அகற்றிவிட்டு அங்கு புதிய கம்பத்தை அமைத்தனர். 
இதை தொடர்ந்து உடன் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’  நாளிதழுக்கும் அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.

Next Story