இயற்கை உரத்துக்காக வயலில் ஆட்டு கிடை அமைக்க விவசாயிகள் ஆர்வம்
திருமருகல் ஒன்றியத்தில் இயற்கை உரத்துக்காக வயலில் ஆட்டு கிடை அமைக்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியத்தில் இயற்கை உரத்துக்காக வயலில் ஆட்டு கிடை அமைக்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
3 போகம் நெல் சாகுபடி
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். மேலும் கோடை நெல் சாகுபடியும் நடைபெறும்.
கடந்த ஆண்டு ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் சம்பா சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணியும் முடிவடைந்துள்ளது. இதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் குறுவை சாகுபடி ஆயத்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இயற்கை உரம்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் 20 ஆயிரம் எக்டேரில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.இதற்காக விவசாயிகள் தங்களது வயல்களை சாகுபடிக்காக தயார்படுத்தி வருகின்றனர்.
குறுவை சாகுபடி பணிகள் தொடங்க உள்ள நிலையில் உரங்களின் பயன்பாடு அவசியமாகிறது. ரசாயன உரங்களின் விலை உயர்வும், தொடர்ந்து பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களால் மண் வளம் மாறி மகசூல் குறைந்து வருவதும் போன்ற காரணங்களால் இயற்கை உரத்துக்காக வயல்களில் ஆட்டு கிடை அமைக்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வயலில் ஆட்டு கிடை
வயல்களில் ஆடுகளை மேயவிட்டு அதன் மூலம் கிடைக்கும் எருவை உரமாக்கி வருகின்றனர். இதற்காக ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள செம்மறி ஆடுகளை வயல்களில் கிடை அமைத்து வருகின்றனர்.
இந்த ஆடுகளின் கழிவுகள் மூலம் இயற்கை உரம் கிடைப்பதுடன், மண் வளமும் அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story