கண்டக்டரை தாக்கி மினி பஸ் கண்ணாடி உடைப்பு
நாகை அருகே கண்டக்டரை தாக்கி மினி பஸ் கண்ணாடியை அடித்து உடைத்த 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சிக்கல்:
நாகை அருகே கண்டக்டரை தாக்கி மினி பஸ் கண்ணாடியை அடித்து உடைத்த 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மினிபஸ்
நாகை அருகே ஆய்மழை வடக்குத்தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் அஜித் மணி (வயது 27).இவர் நாகையில் இருந்து ஆய்மழை செல்லும் தனியார் மினிபஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த பஸ்சில் கண்டக்டராக கூத்தாநல்லூர் அருகே கொத்தம்பட்டி மெயின் ரோட்டை சேர்ந்த அரவிந்தன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்த மினி பஸ் நேற்று முன்தினம் இரவு நாகையில் இருந்து ஆய்மழைக்கு சென்று கொண்டிருந்தது.
கண்டக்டர் மீது தாக்குதல்
அப்போது சிக்கல் ரெயில்வே கேட் அருகே சென்ற போது போக்குவரத்துக்கு இடையூறாக சிக்கல் அருேக மேலகரையிருப்பு பகுதியை சேர்ந்த பிலவேந்திரராஜ் என்பவர் ஆட்டோவை நிறுத்தி வைத்ததாக தெரிகிறது. ஏன் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோவை நிறுத்தி வைத்தீர்கள் என பஸ் கண்டக்டர் அரவிந்தன், பிலவேந்திரராஜிடம் கேட்டுள்ளார்.இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த ஆட்டோ டிரைவர் பிலவேந்திரராஜ் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர், கண்டக்டர் அரவிந்தனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். மேலும் மினி பஸ்சின் முன்பக்க கண்ணனாடியை அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.
5 பேருக்கு வலைவீச்சு
இதில் காயமடைந்த அரவிந்தன் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பஸ் டிரைவர் அஜித் மணி கொடுத்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் பிலவேந்திரராஜ் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story