குளிர்பானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை


குளிர்பானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை
x
தினத்தந்தி 3 April 2022 9:43 PM IST (Updated: 3 April 2022 9:43 PM IST)
t-max-icont-min-icon

பழனியில் குளிர்பானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பழனி:
முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். இதில் ரெயில், பஸ்களில் அதிக அளவில் வருகின்றனர். இந்தநிலையில் கோடைகாலம் என்பதால் தற்போது வெயில் வாட்டி வருகிறது. இதனால் மக்கள் வெயிலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள பழங்கள், குளிர்பானங்கள் ஆகியவற்றை வாங்கி பருகுகின்றனர்.
இதை பயன்படுத்தி பழனியில் பல்வேறு இடங்களில் புற்றீசல் போன்று தள்ளுவண்டி கடைகள் முளைத்துள்ளன. குறிப்பாக உடுமலை சாலை, திண்டுக்கல் சாலை மற்றும் அடிவாரம், பஸ் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் தள்ளுவண்டியில் தர்பூசணி, இளநீர், கூழ், பழங்கள் ஆகிவற்றின் விற்பனை சூடுபிடித்துள்ளது. ஆனால் கடும் வெயிலை பயன்படுத்தி சில கடைகளில் கூடுதல் விலைக்கு குளிர்பானங்கள் விற்கப்படுகிறது. மேலும் சர்பத், பழச்சாறு போன்றவை சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுவதாகவும், காலாவதியான பொருட்களை விற்பனை செய்வதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனவே பழனியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கூடுதல் விலைக்கு குளிர்பானங்கள் விற்பனையை தடுப்பதுடன், சுகாதாரமற்ற முறையில் சர்பத், பழச்சாறு விற்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடைகளின் முன்பு விலைப்பட்டியல் வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story