பெண்ணாடம் அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது
பெண்ணாடம் அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது
பெண்ணாடம்
பெண்ணாடம் அருகே உள்ள சின்ன கொசபள்ளம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பிரபாகரன் மனைவி அனுவித்தியா(வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அனுவித்யா பரிசோதனைக்காக நேற்று கணபதிகுறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உறவினர்கள் அழைத்துச்சென்றனர். அப்போது அங்கு அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து பெண்ணாடத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அதில் அவரை பிரசவத்துக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். பெண்ணாடத்தை அடுத்த நந்தப்பாடி அருகே வந்தபோது அனுவித்யாவுக்கு பிரசவ வலி அதிகரித்ததை அடுத்து ஆம்புலன்சை டிரைவர் ஓரமாக ஒதுக்கி நிறுத்தினார். அப்போது ஆம்புலன்சில் இருந்த மருத்துவ தொழில்நுட்புனர் ரேவதி, நர்சு சிவரஞ்சனி ஆகியோர் பிரசவம் பார்த்தனர். இதில் அனுவித்யாவுக்கு 1½ கிலோ எடையுடன் அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்தரியில் அனுமதிக்கப்பட்ட தாய்-சேய் இருவரும் நலமுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Related Tags :
Next Story