விவசாயிகள் வீட்டில் ரூ.5¾ லட்சம் நகைகள், பணம் திருட்டு


விவசாயிகள் வீட்டில் ரூ.5¾ லட்சம் நகைகள், பணம் திருட்டு
x
தினத்தந்தி 3 April 2022 10:07 PM IST (Updated: 3 April 2022 10:07 PM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூருவில், வெவ்வேறு இடங்களில் விவசாயிகள் வீட்டில் ரூ.5¾ லட்சம் மதிப்பிலான நகைகள், பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது

சிக்கமகளூரு:

சிக்கமகளூருவில், வெவ்வேறு இடங்களில் விவசாயிகள் வீட்டில் ரூ.5¾ லட்சம் மதிப்பிலான நகைகள், பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

விவசாயி

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா ஆல்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராகவேந்திரா. விவசாயியான இவர் அப்பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் அக்கு வந்த யாரோ மர்ம நபர்கள் ரூ.3 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுவிட்டனர். 

டி.வி., பிரிட்ஜ் திருட்டு

இதேபோல் சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜாம்புரா தாலுகா மாக்கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரும் விவசாயி ஆவார். சம்பவத்தன்று இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு அஜ்ஜாம்புராவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் அவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், வீட்டில் இருந்த ரூ.2.70 லட்சம் மதிப்பிலான நகைகள், டி.வி., சலவை எந்திரம், பிரிட்ஜ் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுவிட்டனர். 

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இந்த 2 சம்பவங்கள் குறித்தும் முறையே ஆல்தூர், அஜ்ஜாம்புரா போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்ம நபர்களையும் வலைவீசி தேடிவருகிறார்கள். 2 வீடுகளிலும் சேர்த்து மொத்தம் ரூ.5.70 பொருட்கள் திருடு போய் உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story