குமராட்சி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை வியாபாரி உள்பட 2 பேர் கைது
குமராட்சி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை வியாபாரி உள்பட 2 பேர் கைது
காட்டுமன்னார்கோவில்
ரகசிய தகவலின் பேரில் குமராட்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், தனிப்பிரிவு ஏட்டு கணேசமூர்த்தி மற்றும் போலீசார் தில்லைநாயகபுரம் மெயின்ரோட்டில் உள்ள மளிகைக்கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு விற்பனைக்காக 4 மூட்டைகளில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து மளிகைக்கடை உரிமையாளர் அதே ஊரை சேர்ந்த சாமிநாதன்(வயது 42) என்பவரை கைது செய்த போலீசார் 4 மூட்டைகளில் இருந்த புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இவர் கொடுத்த தகவலின் பேரில் மொத்த வியாபாரியான சிதம்பரம் மார்க்கெட் பகுதி கொத்தவால் தெருவை சேர்ந்த ஜித்தாந்தர்சிங்(38) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story