பனியன் தொழிலாளியை காரில் கடத்திய 7 பேர் கைது


பனியன் தொழிலாளியை காரில் கடத்திய 7 பேர் கைது
x
தினத்தந்தி 3 April 2022 10:16 PM IST (Updated: 3 April 2022 10:16 PM IST)
t-max-icont-min-icon

பனியன் தொழிலாளியை காரில் கடத்திய 7 பேர் கைது

திருப்பூரில் பனியன் தொழிலாளியை கடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள், கார் பறிமுதல் செய்யப்பட்டது. 
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
பனியன் நிறுவன தொழிலாளி கடத்தல்
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள காளம்பாளையத்தை சேர்ந்தவர்  சந்தோஷ் வயது32. இவரது மனைவி மனினீமேகர் 24. இவர்கள் இருவரும் அவினாசி பகுதியிலுள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து  வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 1ந் தேதி இரவு சந்தோஷ் தன்னுடன் வேலை பார்த்த ஒருவரை விட்டுவிட்டு வருவதாக மனைவியிடம் கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். அதன்பின்னர் இரவு நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் கணவரின் செல்போனுக்கு  மனினீமேகர் தொடர்பு ெகாண்டார். அப்போது விரைவில் வந்து விடுவதாக கூறினார். ஆனாலும் அவர் வீடு திரும்பவில்லை. 
இதற்கிடையில் 2ந் தேதி அதிகாலை 2.30 மணியளவில் மனினீமேகர் செல்போனுக்கு ஒரு போன் வந்தது. அந்த போனை மனினீமேகர் எடுத்து பேசியபோது எதிர்முனையில் பேசிய ஆசாமிகள்,  உனது கணவர் சந்தோசை காரில் கடத்தி விட்டதாகவும், எங்கள் வங்கி கணக்கிற்கு ரூ.2 லட்சம் பணம் போட வேண்டும் கூறியுள்ளனர்.
7 பேர் கைது 
 இதனையடுத்து மனினீமேகர் ரூ. 25 ஆயிரத்தை   கடத்தி சென்றவர்கள் வங்கி கணக்கில் செலுத்தினார். அதன்பின்னர்  கடத்தல் ஆசாமிகள்  மீண்டும் மனினீமேகருக்கு போன் செய்து மீதி பணத்தை போடவில்லை என்றால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன மனினீமேகர் பெருமாநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரினையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சைபர் கிரைம் போலீசார் உதவியோடு, கடத்தப்பட்டவரின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர். 
அப்போது கடத்தல் ஆசாமிகள் தேனியில் ஒரு விடுதியில் சந்தோசை அடைத்து வைத்து தாக்கி இருப்பது தெரியவந்தது.  உடனடியாக தேனி விரைந்த  தனிப்படை போலீசார், கடத்தல் ஆசாமிகளிடம் இருந்து சந்தோசை மீட்டு விடுதியில் பதுங்கி இருந்த அங்கு பதுங்கியிருந்த ரீதோய் 21, திணேஷ்குமார் 24 முத்துக்குமார் 29 சரவணன் 22, தேவா 23, ஈஸ்வரன் 28, ரையான்ஷேக் 24 ஆகிய  7 ேபரை  கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட  கார் மற்றும் பட்டா கத்திகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் தேனி மற்றும் திண்டுக்கல்  மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். காயம் அடைந்த சந்தோஷ் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. 

Next Story