மாணவ-மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி


மாணவ-மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி
x
தினத்தந்தி 3 April 2022 10:17 PM IST (Updated: 3 April 2022 10:17 PM IST)
t-max-icont-min-icon

தென்னம்புலத்தில் மாணவ-மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி நடந்தது.

வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா தென்னம்புலம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு தற்காப்புக்காக கராத்தே பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடந்தது.விழாவிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் கல்யாணி ராஜசிம்மன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் இளங்கோவன் வரவேற்றார். மாணவ-மாணவிகளுக்கு கராத்தே பயிற்சியை கராத்தே பயிற்சியாளர் வாசுதேவன் அளித்தார். இதில் பள்ளி செயலாளர் புஷ்பவள்ளி, பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் அருண் மற்றும் பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி ஆசிரியர் உதயகுமார் நன்றி கூறினார்.

Next Story