ஐம்பொன் என்று கல் விநாயகர் சிலையை விற்க முயன்ற மந்திரவாதி கைது
ஐம்பொன் என்று கல் விநாயகர் சிலையை விற்க முயன்ற மந்திரவாதி கைது
தாராபுரத்தில் ரூ.13 லட்சத்துக்கு ஐம்பொன் என்று கல் விநாயகர் சிைலயை விற்க முயன்ற மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இச்சம்பவம் குறித்து தாராபுரம் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
விநாயகர் சிலை
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கருப்பையா . இவருடைய மகளை கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த மந்திரவாதி அப்பா சேட் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். அப்பாசேட் அவ்வப்போது தாராபுத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்து சென்றார். அப்போது கருப்பையா தனது வீட்டில் அரை அடி உயரமுள்ள கல் விநாயகர் சிலை ஒன்றை வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜை செய்து வந்ததை பார்த்துள்ளார். இந்த சிலையை பார்த்த அப்பாசேட், மாமனார் கருப்பையாவிடம், இந்த சிலையில் ரசாயனத்தை பூசி, பசும் பாலை ஊற்றினால் பால் பச்சை நிறமாக மாறும். அந்த பாலை பருகினால் உடலில் உள்ள அனைத்து வியாதிகளும் தீரும் என கூறினார்.
இதனை கேட்ட கருப்பையா அந்த சிலையை அப்பாசேட்டிடம் கொடுத்து அதன்மீது ரசாயனம் பூசி திரும்பக் கொண்டுவந்து கொடுக்குமாறு கூறினார். அதன்படி அந்த சிலையை வாங்கி சென்ற அப்பாசேட் அதன் மீது ரசாயனத்தை தடவி மாமனாரிடம் கொண்டு வந்து கொடுத்தார். அதன்பின்னர் இருவரும் அந்த சிலை மீது பசும்பாலை ஊற்றினர். அப்போது அந்த பால் பச்சை நிறமாக மாறியது.
மந்திரவாதி கைது
இதையடுத்து அந்த சிலையை விற்றால் அதிகமாக சம்பாதிக்கலாம் என முடிவு செய்து அந்த சிலையை விற்பனை முடிவு செய்தனர். அதன்படி அரவக்குறிச்சி பகுதியை சேர்ந்த ராஜா என்பவரை அழைத்து வந்து அந்த சிலையின் மகிகை குறித்தும் ஐம்பொன் சிலை என்றும் கூறினர். ஆனாலும் அவர்கள் கூறியதை நம்ப மறுத்த ராஜாவுக்கு அவர்கள் மீது சந்தேகம், அந்த சிலை மீதும் ஏற்பட்டது. இதையடுத்து சிலை ஐம்பொன் சிலை இ்ல்லை என்றும், நம்மை ஏமாற்ற முயல்கிறார்கள் எஎன தெரிந்து கொண்ட ராஜா அந்த சிலை வேண்டாம் என்று கூறிவிட்டு தாராபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் கருப்பையா வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். போலீஸ் வருவதை அறிந்த கருப்பையா தப்பி ஓடிவிட்டார். மந்திரவாதி அப்பா சேட் மற்றும் அங்கு நின்று கொண்டிருந்தார். அவரை கைது செய்த போலீசார் அந்த சிலையை பறிமுதல் ெ சய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கருப்பையாவை தேடி வருகிறார்கள். மேலும் பறிமுதல் செய்த சிலையை ஆய்வுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story