கொழுவாரியில் ரூ.2¾ கோடியில் சமத்துவபுரம்


கொழுவாரியில் ரூ.2¾ கோடியில் சமத்துவபுரம்
x
தினத்தந்தி 3 April 2022 10:33 PM IST (Updated: 3 April 2022 10:33 PM IST)
t-max-icont-min-icon

வானூர் அருகே கொழுவாரியில் ரூ.2¾ கோடியில் கட்டப்பட்ட சமத்துவபுரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை(செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கிறார். பெலாக்குப்பத்தில் ரூ.500 கோடியில் புதிய தொழிற்சாலைக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கொழுவாரி ஊராட்சியில் ரூ.2 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் 100 வீடுகள் கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டப்பட்டுள்ளது. இந்த சமத்துவபுரத்தை நாளை(செவ்வாய்க்கிழமை) காலை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இதைத்தொடர்ந்து வளாகத்தில் ரூ.2.75 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடையையும் அவர் திறந்து வைக்கிறார். மேலும் ரூ.10.19 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம், ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள நூலகத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். 

நலத்திட்ட உதவிகள்

இதைத்தொடர்ந்து ஒழுந்தியாம்பட்டு ஊராட்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 ஆயிரத்து 722 பயனாளிகளுக்கு ரூ.4269.98 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.2400.77 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 38 திட்டப்பணிகளையும் அவர் திறந்து வைக்க உள்ளார். 
இதையடுத்து திண்டிவனம் வட்டம் பெலாக்குப்பம் சிப்காட் தொழில்பூங்கா வளாகத்தில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் லோட்டஸ் காலணி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி, பேசுகிறார். இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

அமைச்சர்கள் ஆய்வு

இந்த நிலையில் பெரியகொழுவாரி சமத்துவபுரம் பகுதியில் விழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் நேற்று  தொடர்ந்து ஒழிந்தியாம்பட்டு கிராமத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேடை அமைக்கும் பணியை அவர்கள் பார்வையிட்டு, விழா ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் மோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன் முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் மைதிலி ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் முரளி, ராஜி ஒழிந்தியாம்பட்டு ஊராட்சிமன்ற தலைவர் சுலோசனா சக்திவேல் மாவட்ட பிரதிநிதிகள் மாயகிருஷ்ணன், இளங்கோ, நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதற்கிடையில் விழா நடைபெறும் பகுதியில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

Next Story