வைக்கோல் ஏற்றிச்சென்ற டிராக்டர் தீப்பிடித்து எரிந்து சேதம்
சங்கராபுரம் அருகே வைக்கோல் ஏற்றிச்சென்ற டிராக்டர் தீப்பிடித்து எரிந்து சேதமானது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே வடபொன்பரப்பியை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவர் மூக்கனூர் கிராமத்தில் இருந்து டிராக்டரில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு வடபொன்பரப்பியை நோக்கி சென்று கொண்டிருந்தார். மூக்கனூர் சிவன் கோவில் அருகே சென்றபோது மேலே சென்ற மின்கம்பி மீது வைக்கோல் உரசியதாக தெரிகிறது. இதில் வைக்கோல் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சக்திவேல் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் வைக்கோல் மற்றும் டிராக்டர் எரிந்து சேதமானது. இதன் சேதமதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.
Related Tags :
Next Story