புவனகிரி பரங்கிப்பேட்டையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
புவனகிரி பரங்கிப்பேட்டையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
புவனகிரி
புவனகிரி பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் அருள்குமார் தலைமை தாங்கினார். துணை தலைவர் லலிதாமணி முன்னிலை வகித்தார். பேரணியை பேரூராட்சி மன்ற தலைவர் கந்தன் தொடங்கி வைத்தார்.இந்த பேரணியில் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் சண்முகம், அண்ணாஜோதி, பாலமுருகன், இளங்கோவன், ரத்தினம், ராமச்சந்திரன், அலுவலக ஊழியர்கள், பணியாளர்கள், கவுன்சிலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதேபோல், பரங்கிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் விழிப்புணர்வு பேரணிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் செல்லப்பிள்ளை தலைமை தாங்கினார். துணை தலைவர் முகமதுயூனுஸ் முன்னிலை வகித்தார். பேரணியை பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழிசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணி பரங்கிப்பேட்டை பெரிய கடைத்தெரு, கச்சேரிதெரு, வண்டி காரதெரு, சஞ்சீவிராயன் கோவில் தெரு போன்ற வீதிகள் வழியாக சென்று மீண்டும் பேரூராட்சி அலுவலகத்தை அடைந்தது. பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பிளாஸ்டிக்கை ஒழிப்போம், துணிப் பைகளை பயன்படுத்துவோம் என்று கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். இதில் கவுன்சிலர்கள் செழியன், ஆனந்தன், ஜெயந்தி ஜெய்சங்கர், அருள்முருகன், சரவணன், பசிரியாமாஜாபர், ஜாபர்ஷரீப், ரொகையம்மா, கணேசமூர்த்தி மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள் வீரானந்தம், சுதாகர், இளநிலை உதவியாளர் காமராஜ், பதிவறை எழுத்தர் அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் உதயகுமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story