பலகாரக்கடை தீயில் எரிந்து நாசம்
பலகாரக்கடை தீயில் எரிந்து நாசம் ஆனது.
நொய்யல்,
புன்னம் சத்திரத்தில் டீ மற்றும் பலகாரக்கடை வைத்து நடத்தி வருபவர் மணி (வயது 45). இவர் பலகாரம் தயாரிப்பதற்காக எண்ணெய் சட்டியில் எண்ணெய் ஊற்றி தீயை பற்ற வைத்து தீ எரிந்து கொண்டிருந்தது. அப்போது எண்ணெய் அதிகமாக சூடேறியதால் திடீரென எண்ணெய் சட்டியில் தீப்பிடித்து மற்ற பகுதிகளுக்கும் பரவியது. மேலும் டீக்கடையின் கொட்டகையிலும் தீப்பிடித்து வேகமாக எரிய ஆரம்பித்தது. அதேபோல் கடைக்குள் இருந்த மிக்சர் தயாரிக்கும் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் தீயில் எரிந்து கொண்டிருந்தது. இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தும் கட்டுப்படுத்த முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். இருப்பினும் கடையில் இருந்த மிக்சர் தயாரிக்கும் எந்திரம் மற்றும் பல்வேறு பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.
Related Tags :
Next Story