வேலூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.26-க்கு விற்பனை. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி


வேலூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.26-க்கு விற்பனை. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 3 April 2022 10:55 PM IST (Updated: 3 April 2022 10:55 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.26-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

வேலூர்

வேலூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.26-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

வரலாறு காணாத விலை உயர்வு

சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. கியாஸ் சிலிண்டர் மாதத்துக்கு ஒருமுறையும், பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றம் செய்யப்படுகிறது.

நாடு முழுவதும் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து கொண்டே வருகிறது. வேலூர் மாவட்டத்தில் 10 நாட்களுக்கு முன்பு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக தினமும் 50 காசுகள் முதல் 80 காசுகள் வரை பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தது. அதனால் தற்போது பெட்ரோல், டீசல் இதுவரை இல்லாத அளவிற்கு விலை அதிகரித்துள்ளது.

பெட்ரோல் ரூ.110-க்கு விற்பனை

வேலூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.110-ஐ கடந்தது.   ரூ.109.51-க்கு விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல் 75 காசுகள் அதிகரித்து ரூ.110.26-க்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் 76 காசுகள் அதிகரித்து ரூ.100.30-க்கு விற்பனையானது. பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமும் பெட்ரோல், டீசல் விலை சுமார் 50 காசுகள் வீதம் உயர்த்தப்பட்டு வருவது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இந்த விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து விடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 

குறிப்பாக மோட்டார் சைக்கிள், மினிவேன் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story