காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 April 2022 10:55 PM IST (Updated: 3 April 2022 10:55 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கூத்தாநல்லூர்:
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து நேற்று கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் கூத்தாநல்லூர் சிகாபுதின் முன்னிலை வகித்தார். மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் நஜ்முதின் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில்  நீடாமங்கலம் கிழக்கு வட்டார துணை தலைவர்கள் பக்கிரிசாமி, ஜெய்னுல்லாபுதின், நீடாமங்கலம் கிழக்கு வட்டார பொது செயலாளர் சேகர் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர்  கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தியும் சிலிண்டருக்கு மாலை அணிவித்து  காங்கிரஸ் கட்சியினர் கோஷமிட்டனர்.

Next Story