மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர் கைது


மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 3 April 2022 10:58 PM IST (Updated: 3 April 2022 10:58 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்

திருப்புவனம், 
பூவந்தி போலீஸ் சரகத்தைச் சேர்ந்த மடப்புரம் விலக்கு, எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசிப்பவர் சசிகுமார் மனைவி முனீஸ்வரி (வயது38). இவர் தனது மோட்டார் சைக்கிளை கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு குடும்பத்தினருடன் மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்க்கும்போது மோட்டார் சைக்கிள் திருடு போயுள்ளது. இதுகுறித்து முனீஸ்வரி பூவந்தி போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் வழக்கு பதிந்து திருட்டு குறித்து விசாரணை செய்து வந்தார். இந்த நிலையில் சக்குடி விலக்கு பகுதியில் வாகன சோதனை செய்யும் போது திருடுபோன இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது மடப்புரம் விலக்கு பகுதியை சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஜெயசக்தி (21) என்பது தெரியவந்தது. இவரை கைது செய்து மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். 

Next Story