உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வக திறனறி தேர்விற்கு 8 பேர் தேர்வு
உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வக திறனறி தேர்விற்கு 8 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
நொய்யல்,
கரூர் மாவட்டபள்ளிக் கல்வித் துறை சார்பில் 9,10,11,12 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 2021 முதல் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வக திறனறி தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் பங்கேற்ற புஞ்சைதோட்டக்குறிச்சி அரசு உயர் நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் 8 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்கள் 8 பேரையும் தமிழ் நாடு அரசு என்டிஎஸ்இ தேர்வு எழுத தேர்வு செய்து தேர்வுக் கட்டணத்தை அரசே ஏற்றுக் கொண்டது. இந்த 8 மாணவர்களும் தேர்வு எழுதிய நிலையில் தொடர்ந்து மாநில அளவில் நடத்தப்பட்டு வரும் திறனறித் தேர்வில் இப் பள்ளியில் 10 -ம் வகுப்பு பயிலும் மாணவன் நவீன் குமார் மாவட்ட அளவில் முதல் 10 இடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதைப் பாராட்டி நடைபெற்ற அறிவியல் கண்காட்சி பரிசளிப்பு விழாவில் கரூர் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவித் திட்ட அலுவலர்கள், தலைமை ஆசிரியர், வழிகாட்டி ஆசிரியர் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்கள். இப் பள்ளியின் கட்டிடம் மிகவும் சிதிலமடைந்த நிலையில் கட்டிடம் செப்டம்பர் 2021-ல் இடிக்கப்பட்டது. தற்போது பேரூராட்சிக்கு சொந்தமான சமுதாயக் கூடத்தில் பள்ளி நடைபெற்று வருகிறது.பள்ளிக் கட்டிடம் இல்லாத நிலையிலும் மாணவர்கள் தொடந்து சாதனை படைத்துள்ளதை விழாவில் கலந்து கொண்ட அனைவரும் வியந்து பாராட்டினர்.
Related Tags :
Next Story