ஏ.கே.டி.கல்வி நிறுவனத்தில் பரிசளிப்பு விழா


ஏ.கே.டி.கல்வி நிறுவனத்தில் பரிசளிப்பு விழா
x
தினத்தந்தி 3 April 2022 11:15 PM IST (Updated: 3 April 2022 11:15 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.கல்வி நிறுவனத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.கல்வி நிறுவனத்தில் விடுதி நாள் விழாவையொட்டி  மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதற்கு கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஏ.கே.டி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஏ.கே.டி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் வெங்கட்ரமணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு விடுதி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார். பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். இதையடுத்து கலை நிகழ்ச்சிகள் தொடக்க விழா நடைபெற்றது.  இதற்கு  ஏ.கே.டி.கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தாளாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக நகராட்சி தலைவர் சுப்பராயலு, நீலமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினர். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில் வக்கீல் துரைராஜ் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் உள்பட கலந்து கொண்டனர்.

Next Story